காற்றும் நட்பும் ஒன்றே .காற்றை சுவாசிக்காமல் உயிர் வாழமுடியாது நட்பை நேசிக்காமல் உயிர் ஏதும் கிடையாது - இவ்வுலகில் உயிர் ஒன்று இருப்பின் - அது நட்போடு இருக்கும் ! நட்பொன்று இல்லையனில் - அது உயிரற்று கிடக்கும்
நட்பு என்பது சூரியன் அல்ல தோன்றுவதற்கும் மறைவதற்கும் நட்பு என்பது நிலவு அல்ல வளர்வதற்கும் தேய்வதற்கும் நட்பு என்பது காற்று அல்ல தென்றலாவதற்கும் புயலாவதற்கும்
நட்பு என்பது மலர் அல்ல
மலர்வதற்கும் உதிர்வதற்கும்
இன்பத்தின் மறுபெயர்தான் நட்பு
துன்பத்தின் தொலைவிடம் தான் நட்பு
கடலின் ஆழத்தை விட மிக பெரியது தான் நட்பு
காதலை விட புனிதமானது தான் நட்பு
சகிப்பு தன்மை உடையது தான் நட்பு
மென்மையானது தான் நட்பு...............!
Sunday, July 31, 2011
தோழியே தோழனே
தோழியும் உணருவாள்
தோழனும் உணருவான்
தோற்று நான் வீழாமல்
துணைவருவார் என்றென்றும் ...கருத்துகளில் வேரூன்றி
கவிதைகளில் மலரெடுத்து
பூமாலை ஒன்று தொடுத்து
போட்டு கொள்வோம் ஒற்றுமையாய்
எந்த துன்பம் வந்தபோதும்
எப்போதும் துணை இருந்து
கண்ணீர் மட்டும் வேண்டாமென்று
காலம் தோறும் துணை இருப்பார்